Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சர்ச்சைக்குரிய கருத்துகள், ஆர்ப்பாட்டம் குறித்த பாடங்கள் மாணவர்கள் சட்டத்தை மீற ஊக்குவிக்கலாம்: Yale-NUS

சர்ச்சைக்குரிய கருத்துகள், ஆர்ப்பாட்டம் போன்றவை, பல்கலைக் கழக ஆய்வுகளுக்காக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைப்புகள் என Yale-NUS பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சர்ச்சைக்குரிய கருத்துகள், ஆர்ப்பாட்டம் குறித்த பாடங்கள் மாணவர்கள் சட்டத்தை மீற ஊக்குவிக்கலாம்: Yale-NUS

(படம்: Yale-NUS College)

சர்ச்சைக்குரிய கருத்துகள், ஆர்ப்பாட்டம் போன்றவை, பல்கலைக் கழக ஆய்வுகளுக்காக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைப்புகள் என Yale-NUS பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

அந்தத் தலைப்புகளை உள்ளடக்கிய பாடத் திட்டம் ஒன்றை ரத்து செய்த பிறகும் அந்தப் பல்கலைக் கழகத்தின் தலைவர் டான் டாய் யோங் (Tan Tai Yong) அவ்வாறு கூறினார்.

அந்தப் பாடத் திட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவுக்கான காரணத்தையும அவர் விளக்கினார்.

அந்தப் பல்கலையின் 12 மாணவர்களிடம் அது பற்றி கருத்து திரட்டப்பட்டது.

பல்கலையின் முடிவை ஏற்றுக்கொள்வதாக அவர்களில் பெரும்பாலோர் கூறினார்.

இருப்பினும், சட்டத்தை மீறும் அபாயத்துக்கு மாணவர்களை ஆளாக்காமால் இருக்கும்வரை, அத்தகைய தலைப்புகளைத் தொட்டு பாடங்கள் நடத்துவதைப் பல்கலைத் தவிர்த்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மற்றொரு தரப்பில், சில மாணவர்கள், பல்கலைக் கழகத்தின் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனக் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்