Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இயோ சூ காங் விபத்து - ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்ததாக லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

இயோ சூ காங் MRT நிலையத்திற்கு வெளியே நேற்று மூன்று பாதசாரிகள் மாண்ட சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இயோ சூ காங் MRT நிலையத்திற்கு வெளியே நேற்று மூன்று பாதசாரிகள் மாண்ட சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முறையில் வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்ததாக 25 வயது சூ காய் சியாங் என்ற அந்த ஓட்டுநர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

சாலை விளிம்பின் மீது ஏறி தடுப்புக் கம்பிகளை இடித்த லாரி, பாதசாரிகள் மீது மோதியது. அங்கு நின்றிருந்த பேருந்தையும் அது இடித்தது.

இயோ சூ காங் பேருந்து முனையத்துக்கு வெளியே இருந்த தடுப்புத் தூணை மோதிய பிறகே லாரி நின்றது.

ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்ததாக நிரூபிக்கப்பட்டால் சூவிற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்