Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரசாங்க ஊழியர்களுக்கு 13ஆவது மாதச் சம்பளத்துக்கு மேலாக 0.1 மாத போனஸுடன் கூடுதல் தொகை

பெரும்பாலான அரசாங்க ஊழியர்களுக்கு 13ஆவது மாதச் சம்பளத்துக்கு மேலாக 0.1 மாத போனஸும் ஒருமுறை வழங்கப்படும் கூடுதல் தொகையும் கிடைக்கும் என்று பொதுச் சேவைப் பிரிவு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
அரசாங்க ஊழியர்களுக்கு 13ஆவது மாதச் சம்பளத்துக்கு மேலாக 0.1 மாத போனஸுடன் கூடுதல் தொகை

கோப்புப் படம்: Reuters

பெரும்பாலான அரசாங்க ஊழியர்களுக்கு 13ஆவது மாதச் சம்பளத்துக்கு மேலாக 0.1 மாத போனஸும் ஒருமுறை வழங்கப்படும் கூடுதல் தொகையும் கிடைக்கும் என்று பொதுச் சேவைப் பிரிவு அறிவித்துள்ளது.

Superscale நிலைகளில் இருக்கும் மூத்த அரசாங்க ஊழியர்களுக்கு ஆண்டிறுதி போனஸுக்கு பதிலாக 400 வெள்ளி வழங்கப்படவிருக்கிறது.

குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் கூடுதல் தொகை 250 வெள்ளியிலிருந்து 1,500 வெள்ளி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் வழங்கப்படும் 13ஆவது மாதச் சம்பளத்துடன் சேர்த்து அந்தத் தொகை கொடுக்கப்படும்.

நிச்சயமற்ற பொருளியல் சூழல் காரணமாக இவ்வாண்டு போனஸ் வழங்குவதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதாகப் பொதுச் சேவைப் பிரிவு கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்