Images

போதைப் பொருளுக்கு எதிரான கடும் போக்கு தொடரும் - அமைச்சர் கா.சண்முகம்

சிங்கப்பூர், போதைப் பொருளுக்கு எதிரான கடுமையான போக்கைத் தொடரும் என்று உள்துறை அமைச்சர் கா.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், போதைப் பொருள் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டுள்ளன.

அதன் காரணமாக அமெரிக்காவில் போதைப் பொருள் பிரச்சினை கடுமையாகி உள்ளது.

எனவே, சிங்கப்பூர் போதைப் பொருளுக்கு எதிராகக் கடுமையாக இல்லாமற்போனால், நிலைமை கட்டுக்கடங்காமற்போய், அது சமூகத்தைச் சீரழித்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.


Top