Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

3 முறை தங்கப்பதக்கம் வென்ற சிங்கப்பூரின் யிப் பின் சியூ, இவ்வாண்டு உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

சிங்கப்பூரின் யிப் பின் சியூ (Yip Pin Xiu), 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
3 முறை தங்கப்பதக்கம் வென்ற சிங்கப்பூரின் யிப் பின் சியூ, இவ்வாண்டு உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

படம்: Sport Singapore

சிங்கப்பூரின் யிப் பின் சியூ (Yip Pin Xiu), 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தகுதிச்சுற்றில் முதலிடத்தைப் பிடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 14.46 விநாடிகள்.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் யிப் பின் சியூ 4ஆவது முறையாகப் பங்கேற்கிறார்.

அந்தப் போட்டிகளில் அவர் 3 முறை தங்கம் வென்றவர்.

50 மீட்டர், 100 மீட்டர் மல்லாந்த நீச்சலுக்கான உலகச் சாதனை படைத்தவர்.

சிங்கப்பூர் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டு விருதுகளில் இந்த ஆண்டின் சிறந்த பெண் விளையாட்டாளராக யிப் பின் சியூ கௌரவிக்கப்பட்டார்.

அவர், 100 மீட்டர் மல்லாந்த நீச்சலுக்கான நடப்பு வெற்றியாளர்.

சிங்கப்பூர் நேரப்படி, இன்று மாலை 4.40க்கு நடைபெறும் 100 மீட்டர் மல்லாந்த நீச்சலுக்கான இறுதிச்சுற்றில் யிப் பின் சியூ போட்டியிடுவார்.

meWATCH சேவையின் 14 சிறப்பு ஒளிவழிகளில் தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாகக் காணமுடியும்.
mewatch.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தில் பதிந்துகொள்ளவும்.

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்