Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி எச்சில் உமிழ்ந்த ஆடவருக்குச் சிறை

காவல்துறை அதிகாரிகளை அவமதித்தது, தாக்கியது, சண்டைக்குச் சவால் விட்டது ஆகியவை தொடர்பில் 30 வயது இந்திய ஆடவருக்கு 20 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி எச்சில் உமிழ்ந்த ஆடவருக்குச் சிறை

(படம்: Facebook/Yishun South NPC)

காவல்துறை அதிகாரிகளை அவமதித்தது, தாக்கியது, சண்டைக்குச் சவால் விட்டது ஆகியவை தொடர்பில் 30 வயது இந்திய ஆடவருக்கு 20 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரு சம்பவங்கள் தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளை நவீன் லால் பிள்ளை ஒப்புக்கொண்டுள்ளார்.

முதல் சம்பவம் ஜூலை முதல் தேதி நடந்தது.

காலை சுமார் 9.30 மணிக்கு நவீன் தமது வாகனத்தில் தூங்கிவிட்டதால் டாக்ஸி ஓட்டுநர் யீஷுன் சவுத் அக்கம்பக்கக் காவல்துறை நிலையத்தில் உதவி நாடினார்.

காவல்துறை அதிகாரிகள் அவரை எழுப்பியபோது நவீன் கோபப்பட்டார். பின் அங்கிருந்து கிளம்பிய அவர் மீண்டும் காவல் நிலையத்திற்குத் திரும்பி அதிகாரிகளிடம் பேசவேண்டும் என்று கூறினார்.

அவரைச் சமாதானப்படுத்த முயன்ற அதிகாரியைச் சண்டைக்கு அழைத்திருக்கிறார் நவீன்.

அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்ததைப் பதிவுசெய்வதற்கு அழைத்துச் செல்லப்பட்ட நவீன் காவல்துறை அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

பின் தமது காலணியை ஓர் அதிகாரிமீது வீசினார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட நவீன் ஒரு வாரத்திற்குப்பின் மீண்டும் பிடிபட்டார்.

Grab வாகனத்தில் வாந்தி எடுத்து, தகராறு செய்துவிட்டு அங்கிருந்து கிள்மபிய நவீனை புளோக் 477 செம்பவாங் டிரைவில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவரை விசாரிக்கத் தொடங்கிய அதிகாரியைத் தகாத வார்த்தைகளால் திட்டினார் நவீன்.

மீண்டும் கைதுசெய்யப்பட்ட நவீன் மற்றுமோர் அதிகாரியை உதைத்திருக்கிறார்.

பின் இன்னோர் அதிகாரிமீது எச்சில் உமிழ்ந்திருக்கிறார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்