Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

யீஷூன் வீட்டில் தீ : புளோக்கிலிருந்து 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்;இருவர் மருத்துவமனையில்...

மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் 20 வயது மதிக்கத்தக்க இருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
யீஷூன் வீட்டில் தீ : புளோக்கிலிருந்து 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்;இருவர் மருத்துவமனையில்...

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

யீஷூன் அவென்யூ 4இன் புளோக் 663இன் வீடு ஒன்றில் இன்று காலை தீச்சம்பவம் ஏற்பட்டது.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் 20 வயது மதிக்கத்தக்க இருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தப் புளோக்கிலிருந்து 100 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பிற குடியிருப்பாளர்களுக்குத் தகவல் அளிக்க சிலர் வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டினர்.

காலை 7 மணியளவில் தீ ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு வாகனங்களையும் மருத்துவ உதவியையும் அனுப்பிவைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

தீயணைப்பாளர்கள் அங்கு செல்வதற்கு முன்னரே இரண்டு ஆடவர்களும் வீட்டை விட்டு வெளியேறினர்.

(படம்: டாலியா சென்சாசி Facebook)

நான்காவது மாடியிலிருந்து கடும்புகை வெளியேறுவதைக் கண்டதாக Facebookஇல் பதிவு செய்துள்ளார் டாலியா சென்சாசி. தீச்சம்பவம் பற்றிய காணொளி ஒன்றையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.

தீ தற்போது அணைக்கப்பட்டுவிட்டதாகக்  குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்