Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

யீஷூனில் கஞ்சா செடிகள் பறிமுதல்

யீஷுனிலுள்ள ஒரு வீட்டிலிருந்து இரண்டு கஞ்சாச் செடிகளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
யீஷூனில் கஞ்சா செடிகள் பறிமுதல்

(படம்: CNB)

யீஷுனிலுள்ள ஒரு வீட்டிலிருந்து இரண்டு கஞ்சாச் செடிகளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்படும் பொருள்களை SingPost நிலையத்தில் குடிநுழைவுச், சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

யீஷூன் ஸ்டிரீட் 31இல் இருக்கும் அந்த வீட்டில் போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்படும் மேலும் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் குற்றங்கள் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 44 வயது ஆடவரும் 52 வயதுப் பெண்ணும் அவ்வீட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை தொடர்கிறது.

கஞ்சா செடியை வளர்க்கும் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையாக 20 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் 40,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்