Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் 2019: இளையர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை ஊக்குவிக்கும் இளையருக்கு விருது

தமிழ்ச்சுடர் 2019  இளம் சாதனையாளர் விருதைத் தட்டிச் சென்றுள்ளார் ஹரிணி V.

வாசிப்புநேரம் -

தமிழ்ச்சுடர் 2019  இளம் சாதனையாளர் விருதைத் தட்டிச் சென்றுள்ளார் ஹரிணி V.

பல தமிழ்மொழி அமைப்புகளில் அங்கம் வகிப்பதோடு, தமிழ்மொழியைப் பல தளங்களுக்கு எடுத்துச்செல்ல முயற்சி மேற்கொண்ட 24 வயது, ஹரிணி V இன்றைய நிகழ்ச்சியில் விருது வென்றார்.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஈராண்டுக்கு ஒரு முறை தமிழ்ச்சுடர் விருதுகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறது. 

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, நிகழ்ச்சியின்  இணை ஏற்பாட்டாளர்.

பல்வேறு அமைப்புகள் விருது நிகழ்ச்சிக்கு ஆதரவு நல்கியுள்ளன. 

விருது வழங்கும் நிகழ்ச்சி ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (8 நவம்பர்)  நடைபெறுகிறது.

சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு. விக்ரம் நாயர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்