Images
  • handcuff
    படம்:  Jeremy Long

இளையர்களின் கைதுச் சம்பவங்கள் 13% குறைந்துள்ளன

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் கடந்த 4 ஆண்டுகளில் இளையர்களின் கைதுச் சம்பவங்கள்  சுமார் 13 விழுக்காடு குறைந்துள்ளன.

சென்ற ஆண்டு 2,700 இளையர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஒப்புநோக்க, 2014ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 3,100.

இளங்குற்றவாளிகள் பற்றிய கருத்தரங்கில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இதனைத் தெரிவித்தது.

தவறான வழியில் செல்லக்கூடிய இளையர்களை நல்வழிப்படுத்த, சக இளையர்களின் உதவியை நாடுதல். 

இளங்குற்றவாளிகளைக் கையாள்வதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் பல முக்கிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. 

அமைப்புகளிடமிருந்து பெறப்படும் ஒருங்கிணைந்த தலையீட்டையும், ஆதரவையும் அதிகரிக்கும் முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இளையர்களின் தேவைகளைக் கண்டறிய, அதிகாரிகளுக்குப் பயிற்சிகள், தரவுப் பகிர்வு முறையை மேம்படுத்துதல் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

அரசாங்க அமைப்புகளும் சமூகப் பங்குதாரர்களும் தரவுகளைப் பகிர்வதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய இளையர்களைக் கண்டறிய முடியும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.


Top