Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'சிங்கப்பூர் இளையர்கள், கிருமிப்பரவல் காலம் உருவாக்கிய தனித்துவமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்'

சிங்கப்பூர் இளையர்கள், கிருமிப்பரவல் காலம் உருவாக்கிய தனித்துவமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் இளையர்கள், கிருமிப்பரவல் காலம் உருவாக்கிய தனித்துவமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.

மின்னிலக்கத் திறன்களைக் கற்றுத், தொழில்துறை அனுபவத்தைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் இளையர்கள் அதைச் சாத்தியமாக்கலாம் என்றார் அவர்.

சுமார் 700 பேர் பங்கேற்ற, சிங்கப்பூரின் ஆகப் பெரிய இளையர் கருத்தரங்கில் பேசியபோது அதிபர் அவ்வாறு கூறினார்.

காலமாற்றத்துக்கு ஏற்பத் திறன்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றார் அதிபர் ஹலிமா.

கலை, விளையாட்டு, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த இளையர்களின் கவலைகளுக்கு விடையளிக்க விரும்புவதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இணையத்திலும், நேரடியாகவும் நடத்தப்படுகிறது இரண்டு நாள் கருத்தரங்கு.

முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பயிலரங்குகளுக்கும், சிறப்புக் கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தேசிய தினப் பாடலை எழுதி மெட்டமைத்த லின்யிங்கும் (Linying) அதில் கலந்து கொண்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்