Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமூக ஊடகங்கள் வழி தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சியில் இளையர்கள்

சமூக ஊடகங்கள் வழி தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர் இளையர்கள் சிலர்.

வாசிப்புநேரம் -

(நிருபர்: சுகந்தி பெரியசாமி)

சமூக ஊடகங்கள் வழி தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர் இளையர்கள் சிலர்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள், தமிழில் filters, stickers போன்றவற்றை உருவாக்கியுள்ளனர்.

காலத்திற்கு ஏற்றாற்போல் அவர்கள் சமூக ஊடகங்களில் அத்தகைய அம்சங்களைத் தமிழில் உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் 'செய்யுளைக் கண்டுபிடி'...எனும் ஒரு விளையாட்டை, filter வழி அமைத்துள்ளனர்.

COVID-19 காலக்கட்டத்தில் எங்களால் நேரடியாகச் சென்று தமிழ்ச் சமூகத்துடன் நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை.
என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், Instagram, Facebook போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக 'செய்யுளைக் கண்டுபிடி' யோசனை வந்தது.

என்றார் சங்கத்தின் தலைவரான செம்பியன் சோமசுந்தரம்.

இளையர்களிடையே பரபலமான 'Heads Up' என்ற விளையாட்டை போன்று 'செய்யுளைக் கண்டுபிடி'-உம் செயல்படும்.

Instagram-இல் அந்த filter-ஐ பயன்படுத்தும்போது, திரையின் மேற்பகுதியில் குறிப்புகள் தோன்றும்.

குறிப்புகளை வைத்துச் செய்யுள் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.


இதுவரை 40,000 பேர், filter-ஐப் பார்த்துள்ளதாகவும் 6,000 பேர் பயன்படுத்தியுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளரான கலைவாணி முருகப்பன் சொன்னார்.

இருப்பினும், filter-ஐப் பார்க்கவும், பயன்படுத்தவும் எளிமையாக இருந்தாலும், அதை உருவாக்குவதில் சவால்களைச் சந்தித்ததாக உறுப்பினர்கள் கூறினர்.

இந்தச் 'செய்யுளைக் கண்டுபிடி' filter செய்யும்போது குறிப்புகள் உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது.

ஏனென்றால் இந்தக் குறிப்புகள் சுலபமாகவும் இருக்கவேண்டும், சுவாரஸ்யமாகவும் இருக்கவேண்டும்.

என்று கூறினார், கலைவாணி.

இருப்பினும், சிங்கப்பூரில் இளையர்களிடம் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்க, புதுமையான முயற்சிகள் முக்கியம் என்பதை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்