Images
  • zikka
    ( படம்: REUTERS )

சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டின் முதல் ஸீக்கா தொற்று பரவியுள்ள இடம் கண்டுபிடிப்பு

சிங்கப்பூரில் 3 ஸீக்கா தொற்றுச் சம்வங்கள் பதிவாகியுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்திருக்கிறது.

அதன்மூலம் சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டின் முதல் ஸீக்கா தொற்றியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸீக்கா தொற்றால் பாதிக்கப்பட்ட மூவருமே சிராங்கூன் கார்டனில் உள்ள ஹெம்ஸ்லி அவென்யூ (Hemsley Avenue) குடியிருப்பவர்கள்.

அவர்களுக்கு உள்ளூரிலேயே ஸீக்கா தொற்றியது.

ஸீக்கா தொற்றியுள்ள இடம், 8 பேருக்கு டெங்கி பரவியுள்ள இடங்களுக்கு அருகில் இருப்பதாகவும் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

குடியிருப்பாளர்கள் விழிப்பு நிலையில் இருக்கும்படியும், வீட்டில் கொசுக்கள் உருவாகும் இடங்களை அழிக்கும்படியும் அமைப்பு கேட்டுக்கொண்டது.
 

Top