Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

SG50 கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு சாலையோரப் பூங்கா

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் SG50 கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைப் பூங்கா நகரமாக மாற்றியமைக்கும் அரசாங்கத் திட்டத்தின் ஓர் அங்கம் அது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் SG50 கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைப் பூங்கா நகரமாக மாற்றியமைக்கும் அரசாங்கத் திட்டத்தின் ஓர் அங்கம் அது.

சுற்றுப்புற, நீர்வள அமைச்சரும் ஹாலந்து, புக்கிட் தீமா குழுத்தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பூங்காவை இன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அவ்வட்டாரத்திற்கே உரித்தான செடியை நட்டு சாலையோரப் பூங்காவைத் திறந்துவைத்தார் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன். கம்பமாக இருந்த அவ்வட்டாரத்தின் பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் அங்கு நடப்பட்டுள்ள செடிகளும் மரங்களும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவை. அவற்றில் ஒன்று லிப்ஸ்டிக் பால்ம் என்று பரவலாக அழைக்கப்படும் இந்தச் செடி.

மொத்தம் 42 மரங்கள், 70 தென்னை மரங்கள் 30,000த்துக்கும் அதிகமான செடிகள் புக்கிட் தீமா சாலையோரத்தில் அமைந்துள்ளன. குடியிருப்பாளர்களின் உடல்நிலையையும் மனநிலையையும் மேம்படுத்த இயற்கை எழில்மிக்க காட்சிகள் உதவும் என்று டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

அந்த வட்டாரத்தில் வரும் டிசம்பர் மாதம் புதிய பெருவிரைவு ரயில்சேவை செயல்படத் தொடங்கும்.அண்மையில் கட்டுமானப் பணிகளை அதிகம் பார்த்திருக்கும் வட்டாரவாசிகள் இனி பசுமை நிறைந்த சூழலையும் ரசிப்பது முக்கியம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்