Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஸ்கூட்டின் SG50 விமானம்

சிங்கப்பூரின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் தொடர்பில் ஸ்கூட் விமான நிறுவனம் புதிய விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Maju-lah எனப் பெயரிடப்பட்டுள்ள விமானத்தின் மீது SG50 சின்னம், மெர்லயன் சின்னம் முதலானவை சித்திரிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
ஸ்கூட்டின் SG50 விமானம்

Maju-lah விமானத்திற்கு முன் ஸ்கூட் ஊழியர்களும் அந்நிறுவனத்தின் SG50 பங்காளிகளும். (படம்: ஸ்கூட்)

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் தொடர்பில் ஸ்கூட் விமான நிறுவனம் புதிய விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.     Maju-lah எனப் பெயரிடப்பட்டுள்ள விமானத்தின் மீது SG50 சின்னம், மெர்லையன் சின்னம் போன்றவை சித்திரிக்கப்பட்டுள்ளன. பெரிய சிவப்பு நிற பலூன்களும் வரையப்பட்டிருக்கின்றன. 

அந்த பலூன்கள் மீது, ஸ்கூட்டுடன் கைகோர்த்துள்ள 20 உள்ளூர் நிறுவனங்களின் சின்னங்கள் இடம்பெறுகின்றன. BreadTalk, CapitaLand, Gleneagles Singapore, Metro, PropNex, Raffles Education Group, Zalora உள்ளிட்ட நிறுவனங்கள் அவற்றுள் அடங்கும். 

அந்த போயிங் 787 டிரீம்லைனர் விமானத்தில் Scoot தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் ஸ்கூட் ஏற்பாடு செய்திருக்கும் "Garang for Singapore" சவால்களில் பங்கேற்கலாம்.  போட்டியின் விவரங்களை ஸ்கூட்டின் Facebook பக்கத்தில் காணலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்