Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவு செலவுத் திட்டம் : கற்றலில் ஈடுபட்டு மேம்பட வாய்ப்புகள் கிடைக்கும்

Skills Future எனும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு  பகுதியாக அரசாங்கம்,  சிங்கப்பூரர்களுக்கு அதிக ஆதரவைக் கொடுக்கவிருக்கிறது.   

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: Skills Future எனும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசாங்கம், சிங்கப்பூரர்களுக்கு அதிக ஆதரவைக் கொடுக்கவிருக்கிறது. சிங்கப்பூரர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி, வாழ்க்கைத் தொழிலை முன்னெடுத்துச்செல்லவேண்டும் என்பதே அந்தத் தேசியத் திட்டத்தின் நோக்கம். பாடத்திட்டங்களில் சேர்ந்துகொள்வதற்கான உதவித் தொகை, தத்தம் துறைகளில் அனைவரும் நிபுணர்களாவதற்கான படிப்பு உதவித் தொகை ஆகியவை அதில் அடங்கும். 25 வயது அல்லது அந்த வயதை தாண்டிய ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும், அடுத்த ஆண்டில் இருந்து, திறன் மேம்பாட்டுக்கான கணக்கில், ஐந்நூறு வெள்ளி போடப்படும். அவ்வப்போது, அந்தக் கணக்கில் தொகை நிரப்பப்படும். திறன் மேம்பாட்டுக் கணக்கில் உள்ள தொகை காலாவதியாகாது. இருப்பினும், கல்வி அமைச்சு, ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஆதரவால் வழங்கப்படும் கல்விக்கும், பயிற்சிக்கும் மட்டுமே, அந்தத் தொகையைப் பயன்படுத்தலாம் என்று திரு தர்மன் கூறினார்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்