Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவு செலவுத் திட்டம்: பெட்ரோல் தீர்வை விகிதம் அதிகரிப்பு

பெட்ரோல் தீர்வை விகிதம், 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்  முறையாக அதிகரிக்கவிருக்கிறது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: பெட்ரோல் தீர்வை விகிதம், 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக அதிகரிக்கவிருக்கிறது. கரியமில வாயு வெளியேற்றத்தையும், வாகனப் பயன்பாட்டையும் குறைப்பதே நோக்கம். Premium பெட்ரோலுக்கான தீர்வை, லிட்டருக்கு இருபது காசு உயரும் என்று நிதி அமைச்சர் தர்மன் ஷண்முகரத்தினம் தமது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார். இடைநிலைத் தர பெட்ரோலுக்கான தீர்வை, லிட்டருக்கு, 15 காசு அதிகரிக்கும். அதிகரிக்கப்படும் தீர்வையைச் சமாளிக்க, ஓராண்டுக்கு, சாலை வரியில் கழிவு வழங்கப்படும் என்றார் திரு தர்மன். கார்களுக்கு, இருபது விழுக்காட்டுக் கழிவு, மோட்டார் சைக்கில்களுக்கு அறுபது விழுக்காட்டுக் கழிவு, பெட்ரோலைப் பயன்படுத்தும் சிறிய எண்ணிக்கையிலான வர்த்தக வாகனங்களுக்கு நூறு விழுக்காட்டுக் கழிவு வழங்கப்படும். ஓராண்டு நீடிக்கும் அந்த மான்யத்தின் காரணமாக, அரசாங்கத்திற்கு, 144 மில்லியன் வெள்ளி செலவாகும் என்று திரு தர்மன் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்