Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவு செலவுத் திட்டம்: புதிய பங்காளித்துவச் செயல்பாட்டுத் திட்டம்

குழந்தைப் பராமரிப்புச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்காகப்  புதிய பங்காளித்துவச் செயல்பாட்டுத் திட்டம் ஒன்று  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: குழந்தைப் பராமரிப்புச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்காகப் புதிய பங்காளித்துவச் செயல்பாட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் புதிய திட்டத்தின் கீழ் இடம்பெறும் நிறுவனங்கள், கட்டுப்படியான கட்டணங்களில் சேவை வழங்கவும், ஆசிரியர்களை மேம்படுத்தவும், தரத்தை உயர்த்தவும் கடப்பாடு தெரிவிக்கவேண்டும். பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்குக் கூடுதல் உதவிகளை வழங்கும் தொகுப்பின் ஒரு பகுதியாகத் துணைப் பிரதமர் தர்மன், அதனை அறிவித்தார். அத்தகைய நிறுவனங்களில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர், குறைவான கட்டணத்தைச் செலுத்துவார்கள் ; மேம்பட்ட தரத்தைப் பெறுவார்கள்  என்றார் திரு தர்மன். அந்தப் புதிய திட்டம், குழந்தைப் பராமரிப்புத் துறையில் ஏற்கனவே நடப்பில் இருக்கும் முதன்மை நிறுவனத் திட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தகுதிபெறும் பாலர்பள்ளிகளுக்கும், குழந்தைப் பராமரிப்பு நிறுவனங்களுக்கும், முதன்மை நிறுவனத் திட்டம், நிதி ஆதரவு கொடுக்கும். அந்த இரண்டு திட்டங்களும் இணைந்து செயல்படுவதன் மூலம், 2020ஆம் ஆண்டுக்குள், கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காட்டு பாலர்பள்ளிப் பிள்ளைகள் பயன்பெறவேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்கு. அதன் தொடர்பில், அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுக்குச் சுமார் 250 மில்லியன் வெள்ளியைச் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலர் பள்ளிக் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் அரசாங்கம் உதவவிருக்கிறது. இந்த ஆண்டு ஆறு வயதுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு சிங்கப்பூர்ப் பிள்ளையின், குழந்தை மேம்பாட்டுக் கணக்குகளில் கூடுதல் தொகை நிரப்பப்படும். பெரும்பாலான பிள்ளைகள், அறநூறு வெள்ளியைப் பெறுவர். அத்தகைய கணக்குகள் இல்லாதவர்கள், புதிய கணக்குகளைத் திறந்து, அந்தத்  தொகையைப் பெறலாம். அதன் மூலம் சுமார் 230 ஆயிரம் பிள்ளைகள் பயன் பெறுவர். அரசாங்கம், அதற்காக 126 மில்லியன் வெள்ளியைச் செலவிடும் என்று திரு தர்மன் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்