Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவு செலவுத் திட்டம்: நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வருமான வரிக் கழிவு நீட்டிப்பு

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ  தற்போது வழங்கப்படும் நிறுவன  வருமான வரிக் கழிவு ஈராயிரத்துப் பதினேழாம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ  தற்போது வழங்கப்படும் நிறுவன வருமான வரிக் கழிவு ஈராயிரத்துப் பதினேழாம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் செலுத்தப்படும் வரியில் முப்பது விழுக்காடு  அல்லது இருபதாயிரம் வெள்ளி வரை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

முப்பதாயிரம் வெள்ளிக்கு உட்பட்ட புதிய திட்டங்களுக்கு, SPRING அமைப்பின் வாயிலாக  நிறுவனங்கள் CDG உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை  சுலபமாகிறது. ஒரு திட்டத்துக்கான செலவில்  எழுபது விழுக்காடு வரை நிதியுதவி வழங்கப்படலாம். சிறிய, நடுத்தர நிறுவனங்களின் புத்தாக்க முயற்சிகளை ஊக்குவிக்க இந்த ஏற்பாடு.

மேலும், IE Singapore நிதியுதவித் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் செயல்பட முனையும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு எழுபது விழக்காடு வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை ஐம்பது விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. சிறிய, நடுத்தர சிங்கப்பூர் நிறுவனங்கள்  அனைத்துலக மையமாவதை ஊக்குவிக்க அந்தச் சலுகைகள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்