Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவு செலவுத் திட்டம்-தர்மன் கருத்து

இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம், சிங்கப்பூரர்கள் அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்த அரசாங்கம் என்ன செய்யலாம் என்பதில்  கவனம் செலுத்தியதாகத் துணைப்பிரதமரும், நிதியமைச்சருமான திரு  தர்மன் சண்முகரத்தினம் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
வரவு செலவுத் திட்டம்-தர்மன் கருத்து

துணைப்பிரதமரும், நிதியமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூர்: இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம், சிங்கப்பூரர்கள் அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்த அரசாங்கம் என்ன செய்யலாம் என்பதில்  கவனம் செலுத்தியதாகத் துணைப்பிரதமரும், நிதியமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்தினம் கூறியிருக்கிறார். வரவு செலவுத் திட்டம் குறித்து மீடியாகார்ப் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் அதனைத் தெரிவித்தார்.  வர்த்தகங்களுக்குக் குறைவான வரி விதிக்கும் நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது; கூடுதல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் வருமான வரி அதிகரிப்புக்கு சிங்கப்பூரின் அந்த நிலையைப் பாதிக்காது என்றும் திரு தர்மன் நம்பிக்கை தெரிவித்தார். வசதி உள்ளவர்களிடமிருந்து பணத்தை எடுத்து, வசதி இல்லாதவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்பதையும் திரு தர்மன் தெளிவுபடுத்தினார். எல்லோருடைய நலனும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்று கூறிய திரு தர்மன், வசதி குறைந்தவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் எப்போதும் வேலை கிடைக்கவேண்டும்; சம்பளங்கள் உயர வேண்டும்; அதற்கு ஏற்ற வகையில் பொருளாதாரம் இருக்கவேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது என்றார். அடுத்த ஐந்தாண்டுகளில், பொதுப் போக்குவரத்து, மருத்துமனைகள், கட்டமைப்புகள் ஆகியவற்றுக்காக அதிகம் செலவழிக்க வேண்டிவரும் என்பதைத் திரு தர்மன் ஒப்புக்கொண்டார்.

மொத்தத்தில் எதிர்காலத்துக்கான சிங்கப்பூரை உருவாக்குவதற்கு சிங்கப்பூரர்கள் ஒருமித்தவகையில் பொறுப்பெடுத்துக்கொள்ளவேண்டும் என்று திரு தர்மன் கேட்டுக்கொண்டார். இது நமது சமூகம் என்ற உணர்வுடன் அனைவரும் ஈடுபாடு காட்டவேண்டும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்