Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மறைந்த திரு லீ சிங்கப்பூருக்கு பெற்றுத் தந்த அனைத்துலகக் குரல்

மறைந்த திரு லீ குவான் இயூ, அனைத்துலக அரங்கிலும், ஆளுமையுடன் விளங்கினார். அவர் எப்படி வட்டார அமைப்புகளை உருவாக்கி, சிங்கப்பூருக்கு அனைத்துலகக் குரலைப் பெற்றுத் தந்தார் எனப் பார்க்கலாம்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: மறைந்த திரு லீ குவான் இயூ, அனைத்துலக அரங்கிலும், ஆளுமையுடன் விளங்கினார். அவர் எப்படி வட்டார அமைப்புகளை உருவாக்கி, சிங்கப்பூருக்கு அனைத்துலகக் குரலைப் பெற்றுத் தந்தார் எனப் பார்க்கலாம்.

திரு லீ குவான் இயூ தமது சிறிய நாட்டை உலகே திரும்பிப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.  அவரது அபாரப் பேச்சாற்றல் கேட்பவர்களை வசியம் செய்தது. எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் சிங்கப்பூரைப் பற்றி பேசி, நாட்டுக்கு நண்பர்களைப் பெற்றுத் தந்தார். அதே வேளையில், அனைத்துலகப் புள்ளியாகவும் உருமாறினார்.

உலக அரங்கில் சிங்கப்பூர் சிக்கல்களை எதிர்நோக்கலாம் என்பது திரு லீக்கு தெரியும். உலக விவகாரங்கள், நிகழ்வுகள் பற்றிய அவரின் துல்லிய பார்வையால் உலகத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்

பெரிய நாடுகளுக்கு இருந்த செல்வாக்கை சிங்கப்பூருக்கும் பெற்றுத் தந்தார் 1985ல் திரு லீ, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார். சிறிய நாட்டுக்கு அந்த கௌரவம் கிடைப்பது எளிதல்ல. அண்டை நாடுகளோடும் திரு லீ நட்பாய் இருந்தார்.

மலேசியாவின் முன்னையப் பிரதமர் டாக்டர் மஹாத்தீர் முகமதுவுடன் உறவை மேம்படுத்தினார்

காலஞ்சென்ற அதிபர் சுகார்த்தோவுடன் தனிப்பட்ட உறவை வளர்த்தார். சிங்கப்பூருக்கு நண்பர்களை உருவாக்க வேண்டும் என்ற அவரது உறுதி,

நாட்டைப் பாதுகாப்பதற்கான வழிகளையும் தேட வைத்தது.

1967ல் ஆசியான் எனும் தென் கிழக்காசிய நாடுகள் சங்கத்தைத் தொடங்கியது அவற்றில் ஒன்று.

“பிரிட்டிஷ் அமெரிக்கப் படைகள் வெளியேறும் பட்சத்தில் அவற்றால் ஏற்படக் கூடிய வெற்றிடத்தை நிரப்ப, ஒற்றுமையின் வழி பலம்  பெறுவதே ஆசியானின் மறைமுகமான நோக்கம் என்று அவர் எழுதினார்.

முக்கிய பிரச்சினைகளில் அவர் காட்டிய தலமைத்துவம் ஆசியான் நாடுகளின் உறவை வலுப்படுத்த உதவியது.

1978ல் கம்போடியாவை ஆக்ரமித்த வியட்னாம், தங்கள் பக்கமும் திரும்பும் என ஆசியான் நாடுகள் அஞ்சின. குறிப்பாக, தாய்லந்திடம் அச்சம் மேலோங்கியது.

அதனைத்தொடர்ந்து, ஒரே நிலைப்பாட்டை எடுத்தது ஆசியான். கம்போடியாவை ஆதரித்து வியட்னாமை நெருக்கியது. 1989ல் வியட்னாம் கப்போடியாவை விட்டு வெளியேறியது. இப்பிரச்சினையில் அதிக நேரத்தையும் வளங்களையும் செலவழித்தோம். வலிய சண்டைக்குப் போவதால் பயன் ஏதும் இல்லை என்பதைக் காட்டுவதே நம் நலனுக்கு உகந்தது என்று, பின்னர் எழுதினார் திரு லீ.

அப்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ் ராஜரத்னத்துடன் இணைந்து, ஆசியான் தலைவர்களை ஒன்றுபடுத்த அவர் பணியாற்றினார்.

ஆணித்தரமான அவரின் பேச்சும் அனைத்துலக விவகாரங்களை சரியாக கணிக்கும் திறனும் பலரைக் கவர்ந்தது. திரு லீயிடம் ஆலோசனைப் பெற்ற உலகத் தலைவர்கள் அதிகம். அதனால் கவனிக்கப்பட வேண்டிய நாடானது சிங்கப்பூர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்