Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இறுதி நாளன்று திரு லீக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்ட கூட்டம்

காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவுக்கு நாடாளுமன்றத்தில் நேரில் சென்று மரியாதை செலுத்துவதற்கான நேரம், சுமார் எட்டு மணி அளவில் முடிவடைந்தது. மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், திரு லீக்கு பிரியாவிடை கொடுக்கச் சென்றிருந்தனர் மக்கள்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்:காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவுக்கு நாடாளுமன்றத்தில் நேரில் சென்று மரியாதை செலுத்துவதற்கான நேரம், சுமார் எட்டு மணி அளவில் முடிவடைந்தது. மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், திரு லீக்கு பிரியாவிடை கொடுக்கச் சென்றிருந்தனர் மக்கள்.

நாடாளுமன்றத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் திரு லீ குவான் இயூவின் நல்லுடலுக்கு மரியாதை செலுத்த, கடந்த புதன்கிழமையிலிருந்தே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது.

கடைசி நாளான இன்றும் அது குறைந்தபாடில்லை. அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கான வரிசை நேற்றிரவு தற்காலிகமாக மூடப்பட்டது.

பின்னர், இன்று காலை ஆறே காலுக்கு அது மீண்டும் திறந்துவிடப்பட்டது. அதனால், வரிசையிலும் நிற்கமுடியாமல், வீடு திரும்பவும் மனமில்லாமல் அல்லாடினர் மக்கள்.

கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று காத்திருக்கும் நேரம் சற்றுக் குறைவாக இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், காத்திருக்கும் நேரம் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் என்ன, நாட்டு நிர்மாணத்துக்காக, பெரும்பங்காற்றிய திரு லீ குவான் இயூவுக்கு இறுதி மரியாதை செலுத்தியே  ஆகவேண்டும் என்ற உறுதியே பல சிங்கப்பூரர்களிடமும் வெளிப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்