Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

எதிர்காலச் சாதனைகள் இளையர்களின் ஆற்றலைச் சார்ந்துள்ளது: கல்வியமைச்சர்

சிங்கப்பூரின் எதிர்காலச் சாதனைகள்,  இளையர்களின் மீள்திறனையும் வளங்களைப் பயன்படுத்தும் ஆற்றலையும் சார்ந்துள்ளது. சிறுவர்ப்  படையின் 85வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட கல்வியமைச்சர் திரு Heng Swee Keat அதனை  வலியுறுத்தினார். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் எதிர்காலச் சாதனைகள், இளையர்களின் மீள்திறனையும் வளங்களைப் பயன்படுத்தும் ஆற்றலையும் சார்ந்துள்ளது. சிறுவர்ப் படையின் 85வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட கல்வியமைச்சர் திரு ஹெங் சுவீ கியட்(Heng Swee Keat)அதனை வலியுறுத்தினார்.

சிறுவர்ப் படையைச் சேர்ந்த சுமார் ஆறாயிரம் பேர் கலந்துகொண்ட கொண்டாட்ட நிகழ்ச்சி, சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்றது.
எந்தப் பிரச்சினை வந்தாலும் அதனைச் சளைக்காமல் எதிர்கொள்ளும் ஆற்றலை இளையர்களிடையே விதைக்கவேண்டும்.

அதற்கு முதலில்அவர்களுக்குச் சவால்மிக்க சூழ்நிலைகளை வழங்கவேண்டும். அவற்றை எதிர்கொள்ளும் போது பிரச்சினைகளிலிருந்து விவேகத்துடன் மீண்டு வரும் ஆற்றலை வளர்த்துகொள்வர் என்று திரு ஹெங் கூறினார்.

நீண்டதூர சாகசப் போட்டிகள் மாணவர்கள் எதிர்நோக்கக் கூடிய அத்தகைய சூழ்நிலைகளில் ஒன்று. . அவற்றில் மூலம் மாணவர்கள் குழுவாக இணைந்து நடவடிக்கைகளை முடிப்பது, பிரச்சினைகளைச் சமாளிப்பது, உடற்சோர்வை முறியடிப்பது ஆகியவற்றைக் கற்றுகொள்வர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் முன்னோடிகள் வகுத்த்துத் தந்தப் பாதையை அடுத்த தலைமுறையினர் வழிநடத்திச்செல்ல, அவர்கள் இடையூறுகளைச் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும் என்றார், திரு ஹெங்.

மேலும் சிங்கப்பூரின் வருங்காலத் தலைவர்களுக்குச் சமூகத்தின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் திறன் இருக்கவேண்டும். அதற்கு வகைசெய்யும் சிறுவர்ப் படையின் நேரடி முயற்சிகளை நிகழ்ச்சியில் அமைச்சர் பாராட்டினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்