Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மண்டாய் தகனச்சாலை நாளை பிற்பகல் ஒரு மணியிலிருந்து மூடப்படும்

மண்டாய் தகனச்சாலை, நாளை பிற்பகல் ஒரு மணியிலிருந்து மூடப்படும். காலஞ்சென்ற முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு ஏதுவாக அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
மண்டாய் தகனச்சாலை நாளை பிற்பகல் ஒரு மணியிலிருந்து மூடப்படும்

(படம்: Xabryna Kek)

சிங்கப்பூர்: மண்டாய் தகனச்சாலை, நாளை பிற்பகல் ஒரு மணியில் இருந்து மூடப்படும். காலஞ்சென்ற முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு ஏதுவாக அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகனச்சாலைக்குச் செல்வோர், பிற்பகல் ஒரு மணிக்குள் அங்கிருந்து புறப்படுமாறு தேசிய சுற்றுப்புற அமைப்பு ஆலோசனை கூறியிருக்கின்றனர். பிற்பகல் மூன்று மணிக்கு அந்தத் தகனச்சாலை மூடப்படும். அதோடு, இந்த வார இறுதியில் கிங் மிங்(Qing Ming) திருவிழா தொடங்குவதை முன்னிட்டு, அதன் தொடர்பிலான தேதிகளைக் கவனத்தில் கொள்ளும்படி அமைப்பு, பொதுமக்களுக்கு ஆலோசனை கூறுகிறது. கூட்டநெரிசலையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க விரும்புவோருக்கு அந்த ஆலோசனை பொருந்தும். சுவா சூ காங் இடுகாட்டுப் பகுதியிலும், மண்டாய், யீஷூன், மவுண்ட் வேர்னன்(Mount Vernon), சுவா சூ காங் ஆகியவற்றில் உள்ள அரசாங்கத் தகனச்சாலைகளிலும், அந்தத் திருவிழாவின்போது பெருங்கூட்டம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்