Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரு லீயின் நல்லுடலைக் காண வரிசை: மீண்டும் திறப்பு

காலஞ்சென்ற முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவுக்கு, நாடாளுமன்றம் சென்று மரியாதை செலுத்த பாடாங்கில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் யாரும் சேர்ந்துகொள்வதைத் தற்காலிகமாய் நிறுத்திவைத்திருந்த அதிகாரிகள், வரிசைகளை மீண்டும் திறந்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

காலஞ்சென்ற முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவுக்கு, நாடாளுமன்றம் சென்று மரியாதை செலுத்த பாடாங்கில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் யாரும் சேர்ந்துகொள்வதைத் தற்காலிகமாய் நிறுத்திவைத்திருந்த அதிகாரிகள், வரிசைகளை மீண்டும் திறந்திருக்கின்றனர். இன்று காலை சுமார் ஆறேகால் மணியளவில் வரிசைகள் மீண்டும் திறக்கப்பட்டன.இதற்கு முன்பு நேற்று இரவு சுமார் 11 மணியில் இருந்து, வரிசைகளில் எவரும் சேர்ந்துகொள்வதை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தனர்.  பெருமளவிலான மக்கள்-நெரிசல் ஏற்பட்டதால், தனிநபர்களின் பாதுகாப்புக் கருதி அந்த முடிவை எடுத்ததாக அரசுபூர்வ இறுதிச் சடங்கு ஏற்பாட்டுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் நெடுநேரம் காத்திருக்கவேண்டியுள்ளது ; குறிப்பாக முதியவர்களுக்கும், பிள்ளைகளும் அது அசௌகரியத்தைக் கொடுக்கும். அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரிசை தற்காலிகமாக மூடப்பட்டது.  அமரர் திரு லீக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்த விரும்புவோர், தீவெங்கிலும் உள்ள 18 சமூகத் தளங்களுக்குச் செல்லலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்