Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஹாங்காங்கில் திரு லீயின் இறுதிச் சடங்கை நேரடி ஒளிபரப்பு வழியாக கண்டனர் மக்கள்

மறைந்த திரு லீ குவான் இயூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கின் நேரடி ஒளிபரப்பைக் காண, ஹாங்காங்கில் ஐநூற்றுக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர்.

வாசிப்புநேரம் -

மறைந்த திரு லீ குவான் இயூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கின் நேரடி ஒளிபரப்பைக் காண, ஹாங்காங்கில் ஐநூற்றுக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர்.

நேரடி ஒளிபரப்பு காட்டப்பட்ட நகரின் சென்றல் பிளாசா(Central Plaza) கட்டடத்துக்கு, நண்பகலுக்கு முன்னதாகவே மக்கள் செல்லத் தொடங்கினர். திரு லீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகப், பலர் கருப்பு உடையில் சென்றிருந்தனர்.

ஹாங்காங்கில் இருக்கும் சிங்கப்பூர் துணைத் தூதரகம், ஹாங்காங் சிங்கப்பூர் அமைப்பு ஹாங்காங்கின் சிங்கப்பூர் வர்த்தகச் சபை ஆகியவை இணைந்து,  நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

சிங்கப்பூரர்களும், சிங்கப்பூரின் நண்பர்களும் ஒரே சமூகமாக ஒன்றிணைந்து, இறுதிச் சடங்கைக் காண்பதற்கு, அவை அழைப்புவிடுத்திருந்தன.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்