Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் திரு லீ: லீ சியென் யாங்

கடுமையான முடிவுகளை எடுப்பவர் என்ற தோற்றத்தைத் திரு லீ கொண்டிருந்தாலும், அவர் உண்மையிலேயே மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் என்றார் திரு லீ சியென் யாங்.

வாசிப்புநேரம் -
மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் திரு லீ: லீ சியென் யாங்

மறைந்த திரு லீயின் இளைய புதல்வர் திரு லீ சியென் யாங்.

சிங்கப்பூர்: கடுமையான முடிவுகளை எடுப்பவர் என்ற தோற்றத்தைத் திரு லீ கொண்டிருந்தாலும், அவர் உண்மையிலேயே மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் என்றார் திரு லீ சியென் யாங்.

ஒரு நல்ல மனிதராக, ஒரு நல்ல கணவராக, ஒரு நல்ல தந்தையாக, ஒரு நல்ல தாத்தாவாக எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தமது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொன்னார், மறைந்த திரு லீயின் இளைய புதல்வர் திரு லீ சியென் யாங்.

தமது பிள்ளைகள் செல்வச் செழிப்புடன் வளர்வதைத் திரு லீ ஒருபோதும் விரும்பவில்லை. எனவே தமது பிள்ளைகளின் பிள்ளைப்பருவம் சாதாரணமாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்பியதைத் திரு. லீ சியென் யாங் சுட்டினார்.

தமது அரசியல் வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்துக்கொள்ளவே தந்தையார் விரும்பினார்; ஆனால் இன்று அவரது மறைவின் துக்கத்தில் அவை இரண்டும் ஒன்றிணைகின்றன என்றார் திரு லீ சியென் யாங்.

மறைந்த தமது தந்தையாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மழையையும் வெயிலையும் பாராமல் வந்த அனைவரும் தம்மை மனம் நெகிழச் செய்ததாகவும், அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றுகூறி நன்றி தெரிவித்தார் திருலீ சியென் யாங்.

தன்னிகரற்ற தமது தந்தையாரை சிங்கப்பூருடன் பகிர்ந்துகொண்டதாகச் சொல்லி, தமது புகழஞ்சலியை நிறைவுசெய்துவைத்தார் திரு லீயின் இளைய புதல்வர் திரு. லீ சியென் யாங்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்