Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழ் மொழி விழாவின் தொடக்க நிகழ்ச்சி 2015

பல்லின சிங்கப்பூரில் ஆங்கிலம் பொதுவான தொடர்பு மொழியாக இருந்தாலும், அவரவர் பண்பாட்டை நன்கு உணர தாய்மொழிதான் முக்கியமாக இருக்கிறது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: பல்லின சிங்கப்பூரில் ஆங்கிலம் பொதுவான தொடர்பு மொழியாக இருந்தாலும், அவரவர் பண்பாட்டை நன்கு உணர தாய்மொழிதான் முக்கியமாக இருக்கிறது. அதற்காகவே சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ(Lee Kuan Yew), தாய்மொழியுடன் இணைந்த இரு மொழிக் கொள்கையை வகுத்ததாக,  பிரதமர் அலுவலக அமைச்சர் திரு S. ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.

வசந்தம் ஒளிவழியில், நேரடியாக ஒளிபரப்பானது, தமிழ் மொழி விழாவின் தொடக்க நிகழ்ச்சி. மீடியாகார்ப் அரங்கில், இரவு எட்டரை மணிக்கு நிறைவு பெற்ற அந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் அமைச்சர். முன்னரே பதிவுசெய்யப்பட்ட அவரின் சிறப்பு உரை, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.

தமிழை அன்றாட வாழ்வில் அதிகமாகப் பேச ஊக்குவிக்கும் அங்கங்களோடு நடைபெற்றது தொடக்க நிகழ்ச்சி. தமிழ் ஊடகத் துறையில் பணிபுரிவோர், தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த ஆண்டின் தமிழ்மொழி விழாவில், நாற்பதுக்கும் அதிகமான அமைப்புகள் பங்கேற்கின்றன. சமூகத்தின் வெவ்வேறு வயதினரை இலக்காகக் கொண்ட 40-நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றுள் முப்பத்தைந்து பொது நிகழ்ச்சிகள்.. ஐந்து, பள்ளி மாணவர்களுக்கானவை.

இன்று முதல் இம்மாதம் இருபத்தாறாம் தேதி வரை நடைபெறும் தமிழ்மொழி விழாவின் கருப்பொருள் 'தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்'. ஒன்பதாவது ஆண்டாக நடைபெறுகிறது இந்த விழா.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிங்கை வட்டாரங்களின் வரலாற்றுச் சிறப்பைக் கற்பிக்கும் 'நினைவோடு குதூகலம்', ஆசியான் கவிஞர் திரு. க.து.மு.  இக்பாலின் கவிதைகளை இசைக் கச்சேரியாகவும் நாடகமாகவும் படைக்கும் 'கவிச்சாரல்', பத்து நிமிட நாடகங்களை வடிவமைக்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் 'பத்தே நிமிடம்' ஆகியவை, வரும் நாட்களில் நடைபெறவுள்ள சில நிகழ்ச்சிகள்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்