Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பொருளியல் வளர்ச்சியுடன் சமூகப் பிணைப்பு

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு நடத்திய 'அமைச்சரைக் கேளுங்கள் - வரவு செலவுத் திட்டம் 2016' என்ற^ நேரடிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில்  பேசினார் திரு. ஈஸ்வரன்.^

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: முதியோருக்கு உதவ வேண்டும் என்பது அரசாங்கத்தின் முக்கியக் கொள்கை. குறிப்பாக, மத்திய சேமநிதிச் சேமிப்பு குறைவாக இருக்கும் 65 வயதைத் தாண்டியோருக்கு உதவ Silver Support எனும் மூத்தோர் ஆதரவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வர்த்தக, தொழில் அமைச்சர் திரு. S. ஈஸ்வரன் அதனை வலியுறுத்தினார்.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு நடத்திய 'அமைச்சரைக் கேளுங்கள் - வரவு செலவுத் திட்டம் 2016' என்ற நேரடிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசினார் திரு. ஈஸ்வரன்.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அனுகூலங்கள் அறவிக்கப்பட்டிருப்பதை அமைச்சர் சுட்டினார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கூடிய திட்டங்கள் பற்றியும் பேசப்பட்டது.
பொருளியல் வளர்ச்சி, சமூகப் பிணைப்பு இரண்டையும் கருத்தில்கொண்டே இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டதாக கலந்துரையாடலில் எடுத்துரைக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்