Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதம் - வரும் திங்கட்கிழமை

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதம் தொடங்கவிருக்கிறது. விவாதத்துக்கு முன்னர், மற்ற தலைப்புகளில் 23 கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதம் - வரும் திங்கட்கிழமை

நாடாளுமன்றம். (கோப்புப் படம்: Ngau Kai Yan)

சிங்கப்பூர்: வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதம் தொடங்கவிருக்கிறது. விவாதத்துக்கு முன்னர், மற்ற தலைப்புகளில் 23 கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றில் இரண்டு, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கல்லீரல் அழற்சித் தொற்று பற்றியவை.

சம்பவத்தில் தொடர்புடையோர் குறித்த மேல் விவரங்கள் பற்றியும் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனைகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் Leon Perera. மொத்தம் 16 பேர் அந்தச் சம்பவத்தின் தொடர்பில் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எதிர்நோக்கியதாகச் சென்ற மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் 12 பேர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் தலைமைத்துவப் பொறுப்புகளில் இருப்போர். நான்கு பேர் சுகாதார அமைச்சைச் சேர்ந்தோர்.

இருப்பினும் அவர்கள் யார்? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்ற மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. கல்லீரல் அழற்சிப் பரவல் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரம் தேவை என Tampines குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Cheng Li Hui கேட்டிருக்கிறார். கீழ்த்தளங்கள், நடைபாதைகள் மற்ற பொது இடங்கள் ஆகியவற்றில் வேலிகள் போடுவது குறித்த விதிமுறைகள் பற்றிய கேள்வியை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் Daniel Goh தாக்கல் செய்துள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்