Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வேலை வாய்ப்புகளில் பாதிப்பு - சிங்கப்பூரர்கள் கவலை

மெதுவடைந்துவரும் பொருளியலும் அதனால் வேலைவாய்ப்புகளில் ஏற்படும் தாக்கங்களும்  சிங்கப்பூரர்களிடையே அதிக அக்கறையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: மெதுவடைந்துவரும் பொருளியலும் அதனால் வேலைவாய்ப்புகளில் ஏற்படும் தாக்கங்களும் சிங்கப்பூரர்களிடையே அதிக அக்கறையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. நிதி அமைச்சும், அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான REACH-உம் நடத்திய கலந்துரையாடல் அங்கங்களில், சுமார் 3,600-க்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டன. இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்னிட்டு அந்தக் கருத்துக்களை சிங்கப்பூரர்கள் REACH இணையவாசலில் சமர்ப்பித்தனர்.

மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களின் ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்வது முக்கியம் என அவர்களில் பலர் அறிந்திருப்பதாகக் கூறினர். இந்த ஆண்டின் வரவுசெலவு திட்டத்தில் கவனம் செலுத்தக்கூடிய அம்சங்கள் குறித்து கருத்துகள் திரட்டப்பட்டன. சென்ற மாதம் முதல் தேதியிலிருந்து 26-ஆம் தேதி வரை பொது மக்கள் தங்களின் கருத்துக்களை இணையத்தளத்திலும் நேரடி கலந்துரையாடல் அங்கங்களிலும் பகிர்ந்துகொண்டனர்.

மெதுவடைந்துவரும் பொருளியலைச் சமாளிக்க அரசாங்கம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்த மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவதாக அதில் சிங்கப்பூரர்கள் கூறினர். வேலைப் பாதுகாப்பு குறித்து சிலர் அக்கறை தெரிவித்திருந்தனர். நடுத்தர வயது ஊழியர்கள், தகுந்த திறன்கள் இன்றி வேறு துறைக்கு மாறுவதில் இருக்கும் சிரமங்களைப் புரிந்துவைத்திருப்பதாகக் கூறினர். அத்தகைய ஊழியர்களுக்கு நிதி ஆதரவளிக்கும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டால் பயனளிக்கும் என்று நம்புவதாகக் கருத்துத் திரட்டு அங்கத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டிப் பயிற்சிகள், ஓய்வுபெற்ற வயதைத் தாண்டி வேலைசெய்வோருக்கான நிலையான வேலை வாய்ப்புகள் போன்றவை குறித்தும் பேசப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்