Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தொழில்துறை உருமாற்றத் திட்டத்துக்கு 4.5பி

தொழில்துறை உருமாற்றத் திட்டத்துக்கு அரசாங்கம் நாலரை பில்லியன் வெள்ளியை ஒதுக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

தொழில்துறை உருமாற்றத் திட்டத்துக்கு அரசாங்கம் நாலரை பில்லியன் வெள்ளியை ஒதுக்கவிருக்கிறது.

அந்தப் புதிய திட்டம் நிறுவனங்களும் தொழில்துறைகளும் புதிய மதிப்பை உருவாக்கவும் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். 

புத்தாக்கத்தின் வழி நிறுவனங்களையும் தொழில்துறைகளையும் உருமாற்றுவது அதன் குறிக்கோள் என்று நிதியமைச்சர் திரு. ஹெங் சொன்னார். 

சமுதாயத்தில் புத்தாக்கத் திறன் பரவுவதற்கு அரசாங்கம் கைகொடுக்கும் என்றார் திரு. ஹெங்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் தொழில்துறை ஆய்வுத்துறை ஒத்துழைப்புக்காக 4 பில்லியன் வெள்ளிவரை ஒதுக்கப்படுமெனப் பிரதமர் திரு. லீ சியென் லூங் கூறியிருந்தார். 

அது "ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2020" திட்டத்தின் ஒரு பகுதி. 

முதற்கட்டமாக அரசாங்கம் தேசிய ஆய்வு நிதிக்கு ஒன்றரை பில்லியன் வெள்ளியை வழங்கும் என்று நிதியமைச்சர் கூறினார். 

புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கும் தற்போதுள்ள நிறுவனங்களுக்கும் அதிக ஆதரவு கிடைக்குமெனக் கூறப்பட்டது. 

"SG-Innovate" எனும் புதிய திட்டம் அதற்கு உதவும்.

வளர்ந்துவரும் தொழில்முனைவோர், வழிகாட்டிகள் ஆகியோர் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் அது கைகொடுக்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்