Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பரிவுமிக்க சமூகத்தை உருவாக்க புதிய திட்டம்

மேலும் பரிவுமிக்க சமூகத்தை உருவாக்கும் விதத்தில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

வாசிப்புநேரம் -

மேலும் பரிவுமிக்க சமூகத்தை உருவாக்கும் விதத்தில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

புதிய நிதியும் அறிமுகமாகும். 

இங்குள்ள நிறுவனங்கள் சமூகப் பொறுப்பில் ஈடுபாட்டைக் கொண்டிருக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது நோக்கம்.  

சென்ற ஆண்டு ஓர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சிங்கப்பூரின் பல இனக் கலாசார அடையாளத்தை இசை மூலம் வெளிப்படுத்த அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

SG50 கொண்டாட்ட நிதியின் ஆதரவில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான படைப்புகளில் ஒன்று அது.

சமூக உணர்வைக் கூட்டுவதில் புதுப்புதுத் திட்டங்களைக் கொண்டுவர அந்த நிதி வாய்ப்பளித்தது.

அரசாங்கம் அந்த முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.

அதற்கு OSF எனும் 'நம் சிங்கப்பூர் நிதி' அறிமுகம் செய்யப்படும்.

நிதியின் மொத்த மதிப்பு 25 மில்லியன் வெள்ளியாக இருக்கும்.

தேசிய அடையாளத்தை ஊக்குவித்தல் அல்லது சமூகத் தேவைகளைக் கையாள்வதன் தொடர்பிலான திட்டங்களை வழிநடத்த முன்வரும் சிங்கப்பூரர்களை அரசாங்கம் ஆதரிக்கும். 

'நம் சிங்கப்பூர் நிதி' எனப்படுவதற்குக் காரணம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே என்றார் திரு ஹெங். 

நம் பலத்தையும், அன்பையும் பகிர்ந்துகொள்ளலாம். 

அனைவரும் சேர்ந்து சிங்கப்பூரை வளர்த்துவிட முடியும்.

பரிவு, மீள்திறன், முடியும் என்ற உணர்வைக் கட்டிக்காத்தல், ஒற்றுமை, சிங்கப்பூரர் என்ற உணர்வு ஆகியவற்றை மேம்படுத்த நம் சிங்கப்பூர் நிதி உதவும் என்றார் திரு ஹெங்.

சிங்கப்பூரர்களுக்கு மட்டுமல்லாமல் நிறுவனங்களுக்கும் நிதி கைகொடுக்கும்.

புதிய முன்னோடித் திட்டத்தின் மூலம் சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்த விரும்பும் நிறுவனங்கள் நிதியின்மூலம் பயனடையும். 

வரும் ஜூலை மாதம் தொடங்கும் திட்டம் 2018 ஆம் ஆண்டு இறுதிவரை நடப்பிலிருக்கும். 

வர்த்தகத்துறைக்கும், பொது நலக் கழகங்களுக்கும் இடையிலான பங்காளித்துவத் திட்டத்தின்கீழ் நிறுவனங்கள் பயன்பெறும். 

தொண்டூழியம் செய்யவும், பங்காளித்துவத் திட்டத்துக்குக் கைகொடுக்கவும் ஊழியர்களை அனுப்பி வைக்கும் நிறுவனங்கள் வரிச்சலுகைகளைப் பெறும். 

சம்பளத்திலும் மற்ற செலவுகளிலும் அவற்றுக்கு 250 விழுக்காடு வரிக் கழிவு கிடைக்கும். 

ஊழியர்களின் அனைத்துவிதப் பணிமாற்றங்களும் அதில் அடங்கும். 

ஆண்டுக்கு அதிகபட்சமாக 250,000 வெள்ளி வரிக்கழிவு வழங்கப்படும்.

சமூக உண்டியலின் ஷேர் திட்டத்தின்மூலம் நிறுவனங்கள் ஓராண்டில் செலுத்தும் நன்கொடைத் தொகை அதிகரித்தால் அரசாங்கமும் அதுபோல் வெள்ளிக்கு வெள்ளி வழங்கும். 

அடுத்த மாதம் தொடங்கி மூவாண்டுக்கு அது நடப்பிலிருக்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்