Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"குணம் முக்கியமல்ல என சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது": ஹெங் சுவீ கியெட்

நிதியமைச்சர் திரு ஹெங் சுவீ கியெட், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் பால் தம்பையா விடுத்த அறிக்கை, சிங்கப்பூர் அரசியல் வரலாற்றின் ஆக அதிக அதிர்ச்சியளிக்கும் அறிக்கைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார்.   

வாசிப்புநேரம் -
"குணம் முக்கியமல்ல என சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது": ஹெங் சுவீ கியெட்

நிதியமைச்சர் திரு ஹெங் சுவீ கியெட்டின் கோப்புப் படம்(படம்: Justin Ong))

நிதியமைச்சர் திரு ஹெங் சுவீ கியெட், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் பால் தம்பையா விடுத்த அறிக்கை, சிங்கப்பூர் அரசியல் வரலாற்றின் ஆக அதிக அதிர்ச்சியளிக்கும் அறிக்கைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார்.   

டாக்டர் தம்பையா நேற்று ஃபேஸ்புக் வீடியோ பதிவில் டாக்டர் சீயின் குணத்தைத் தாக்கிப் பேசுவது சரியல்ல என்று கூறியிருந்தார்.

ஒரு நபர் சொல்வதை அல்லது அவர் செய்வதைக் குறைகூறலாம். 

ஆனால் அவருடைய குணத்தைப் பற்றிக் கேள்வியெழுப்புவது தவறு என்று குறிப்பிட்ட டாக்டர் தம்பையா ஒருவர் சொல்வதும் செய்வதும் அவர் யார் என்பதை நிர்ணயிக்காது என்றார்.

அதற்கு நிதியமைச்சர் திரு ஹெங் இன்று ஃபேஸ்புக்கில் பதிலளித்தார். 

குணம் முக்கியமல்ல என்று பேராசிரியர் தம்பையா விடுத்த அறிக்கை தமக்கு ஆச்சரியத்தை அளித்ததாகக் கூறினார். 

குணம் முக்கியமில்லை என்றால், ஒருவர் பொய் சொல்லலாம், ஏமாற்றலாம், துரோகம் செய்யலாம் என்று பொருள்படுவதாக மக்கள் செயல் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினருமான திரு ஹெங் சுட்டினார். 

இத்தகைய அரசியல்வாதிகளை வாக்காளர்கள் எப்படி நம்புவது என்று அவர் கேள்வி எழுப்பினார். 

நேற்றுப் பிரதமர் திரு லீ சியென் லூங்கும், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வீடியோ அறிக்கைக்குப் பதிலளித்தார். 

ஒரு வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு அல்லது பொதுச் சேவையில் ஈடுபடுவதற்குத் தகுதியானவர் என்பதை நிர்ணயிப்பதற்குக் குணம் மிக முக்கியம் என்றார் அவர். 

மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களுக்கும் இது பொருந்தும். 

நல்ல குணமும் நேர்மையும் அடிப்படைத் தேவைகள் என்று குறிப்பிட்ட பிரதமர், எதிர்க்கட்சியினருக்கும் இது பொருந்தும் என்றார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்