Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"எனது முடிவுகளைக் கேலி செய்யவோ, குறைகூறவோ வேண்டாம்"(வீடியோ)

அதே கூட்டத்தில் பேசிய சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சீ சூன் ஜுவான், கட்சிக்காக நேரத்தை அர்ப்பணித்தது, நல்ல ஒரு வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக புத்தகங்கள் எழுதுவது போன்ற தமது முடிவுகளைக் கேலி செய்யவோ, குறைகூறவோ வேண்டாம் என அமைச்சர் கிரேஸ் ஃபூவைக் கேட்டுக் கொண்டார்.

வாசிப்புநேரம் -

இதுவரை தாம், பிரதமர் லீயின் தங்கையான டாக்டர் லீ வேய் லிங், பிரதமரைப் பற்றிக் கூறியது பற்றிப் பேசியது இல்லை. தாம் பேசியதாக எங்கு சென்று தேடிப் பார்த்தாலும் இருக்காது. ஏனென்றால், தாம் அதைப் பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை என்றார் டாக்டர் சீ.

அந்த விவகாரம் பற்றிப் பேசுவதற்குப் போதிய சந்தர்ப்பம் இருந்தாலும் தாம் அதைச் செய்ய விரும்பவில்லை. அத்தகைய அரசியலில் தாம் ஈடுபட விரும்பவில்லை என டாக்டர் சீ கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்