Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மக்கள் சந்திப்புகள் நடத்த டாக்டர் சீ திட்டம்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் சீ சூன் ஜுவான் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மக்கள் சந்திப்புகள் நடத்த டாக்டர் சீ திட்டம்

சென்ற வெள்ளிக்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் டாக்டர் சீ சூன் ஜுவான்.(படம்: Xabryna Kek))

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் சீ சூன் ஜுவான் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களுக்கு முழுநேரச் சேவையாற்ற தாம் அளித்திருக்கும் உறுதியில் அது ஒரு பகுதி என்றார் அவர்

இன்று காலை புக்கிட் பாத்தோக்கில் மேற்கொண்ட தொகுதி உலாவின்போது டாக்டர் சீ செய்தியாளர்களிடம் பேசினார். 

குடியிருப்பாளர்கள் எப்போதுமே தங்கள் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்த்துவைக்க வேண்டும் என்று இருப்பதில்லை.

பதிலாக, பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு என்றார் டாக்டர் சீ.

வாரம் ஒரேயொரு மக்கள் சந்திப்புக் கூட்டத்தால் மட்டும் அந்தத் தேவையை நிறைவுசெய்ய முடியாது.

மக்கள் சந்திப்புக் கூட்டம் வாரம் ஒருமுறை என்றிருக்கக் கூடாது. 

சில சமயம் ஒரு மணிநேரம், 2 மணிநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக மக்கள் தம்மிடம் கூறியிருப்பதாகச் சொன்னார் டாக்டர் சீ. 

நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்க்க ஏன் அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்? 

மக்கள் சந்திப்புக் கூட்டத்தை விட்டால் வேறு நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்க்க முடியாது.

அதனால்தான், குடியிருப்பாளர்கள் காத்திருக்கின்றனர் என்றார் டாக்டர் சீ. 

ஒருமுறைக்கு அப்பாலும் குடியிருப்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்துப் பேசும் விதத்தில் வசதிசெய்து தர தாம் விரும்புவதாக அவர் சொன்னார். 

வாரம் ஒருமுறை சந்தித்துவிட்டு எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டுச் செல்வது போதுமா என்று கேள்வி எழுப்பினார் டாக்டர் சீ.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்