Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

குறைந்தபட்சத் தொகைத் திட்டம் பற்றி டாக்டர் சீ குறைகூறல்

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், மத்திய சேமநிதிக் குறைந்தபட்சத் தொகைத் திட்டத்தைக் குறைகூறியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், மத்திய சேமநிதிக் குறைந்தபட்சத் தொகைத் திட்டத்தைக் குறைகூறியிருக்கிறார்.

தமது கட்சியின் மூன்றாவது தேர்தல் கூட்டத்தில் அவர் பேசினார். தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் மத்திய சேமநிதிப் பணத்தைச் சிங்கப்பூரர்களிடம் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தப் போவதாக டாக்டர் சீ சொன்னார்.

அரசாங்கத்தின் முதலீட்டுத் திட்டங்கள் வெற்றிபெறாததால் மக்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க அதனிடம் போதிய நிதியில்லையா என்று அவர் கேள்வியெழுப்பினார். 

சில வாரங்களுக்கு முன் ஹாங்காங் ஷங்காய் வங்கி, ஆய்வு ஒன்றை வெளியிட்டது.

வாழ்க்கைச் செலவினம் காரணமாக சிங்கப்பூரில் வேலைஓய்வு பெறுவது மிகக் கடினமான ஒன்று என அதில் கூறப்பட்டுள்ளதாக டாக்டர் சீ சொன்னார். 

ஓய்வு வயதை நெருங்கும் சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர், அடுத்த ஐந்தாண்டுகளில் தாங்கள் ஓய்வு பெற இயலாது என்று கூறியுள்ளனர்.

உலக சராசரி 38 விழுக்காடு மட்டுமே. சிங்கப்பூரில் 50 விழுக்காடு. 30 விழுக்காட்டினர், முழுமையாகத் தங்களால் ஓய்வு பெற இயலாது என்று கூறியுள்ளார்.

உலக சராசரி 18 விழுக்காடு என்றார் டாக்டர் சீ.
போதுமான சேமிப்பு இல்லாதது அல்லது சார்ந்திருப்போரைக் கவனித்துக் கொள்ளத் தேவைப்படுவது தான் பிரச்சினை என்று ஆய்வில் கலந்துகொண்டோர் கூறியிருந்தனர்.

மத்திய சேமநிதித் திட்டத்தால் உலகிலேயே ஓய்வுக்காலத்திற்கு ஆக அதிகமாகச் சேமிப்பவர்களாக நாம் இருந்தும் ஏன் அது போதுமானதாக இல்லை என்று டாக்டர் சீ கேள்வியெழுப்பினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்