Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"மூத்தோருக்கு உரிய மரியாதை கிடைப்பதை உறுதிசெய்வேன்"

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், மூத்த சிங்கப்பூரர்களை அரசாங்கம் tissue தாளைப் போல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், மூத்த சிங்கப்பூரர்களை அரசாங்கம் tissue தாளைப் போல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அரசாங்கம் அவர்களைப் பயன்படுத்திவிட்டு, தூக்கியெறிவதாக அவர் கூறினார்.

இன்றிரவு நடைபெற்ற தமது கட்சியின் முன்றாவது தேர்தல் கூட்டத்தில் பேசியபோது, டாக்டர் சீ அவ்வாறு கூறினார்.

இடைத்தேர்தலில் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், மூத்த சிங்கப்பூரர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதை உறுதிசெய்யப் போவதாக அவர் தெரிவித்தார். 

சிங்கப்பூரில் முதியோர்கள் மிகக் கடுமையான காலக்கட்டத்தைச் சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தற்கொலை செய்து கொள்ளும் மூத்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஈராயிரமாம் ஆண்டில் 79 முதியோர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஈராயிரத்துப் பத்தில் அந்த எண்ணிக்கை 95ஆக உயர்ந்தது. 2014இல் 120 மூத்தோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இது ஈராயிரமாம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 விழுக்காடு உயர்வு. அதாவது சிங்கப்பூரில் ஒவ்வொரு மூன்று நாட்களிலும் ஒரு முதியவர் தற்கொலை செய்து கொள்வதாக டாக்டர் சீ குறிப்பிட்டார்.

யாருக்கும் தெரியாமல் தனியாக மரணமடைவது குறித்து மூத்தோர் அதிகம் அச்சப்படுவதாக ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு கடந்த மாதம் தகவல் வெளியிட்டது.

இந்தப் பிரச்சினைகளில் பல, மக்கள் செயல் கட்சியின் கொள்கைகளால் ஏற்பட்டவை என்று டாக்டர் சீ சொன்னார். 

உதாரணத்திற்கு, சில முதியோர், வருவாய் பெறுவதற்காக சிறிய வீட்டுக்கு மாறக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். 

அவ்வாறு செய்யும்போது பல ஆண்டுகளாகத் தாங்கள் வாழ்ந்துவந்த சமூகத்திலிருந்து மாறி முற்றிலும் புதிய அக்கம்பக்கத்திற்கு அவர்கள் செல்ல வேண்டியிருப்பதாக டாக்டர் சீ குறிப்பிட்டார்.

தங்கள் குடும்பங்கள், நண்பர்களை விட்டு அவர்கள் விலக நேரிடலாம். இது முதியோருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும்.

முதியோரின் சிரமத்தை அரசாங்கம் உண்மையில் அறிந்துள்ளதா என்று டாக்டர் சீ வினவினார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்