Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல ஆலோசனை

வரும் சனிக்கிழமை, புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலில் வாக்களிக்கவிருப்போர், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியோ, நடந்தோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுமாறு ஆலோசனை கூறப்படுகின்றனர்.  

வாசிப்புநேரம் -
பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல ஆலோசனை

(படம்: REUTERS/Edgar Su)

வரும் சனிக்கிழமை, புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலில் வாக்களிக்கவிருப்போர், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியோ, நடந்தோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுமாறு ஆலோசனை கூறப்படுகின்றனர்.

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் தினத்துக்கான போக்குவரத்து, பாதுகாப்பு ஆலோசனைகளை போலீசார் இன்று வெளியிட்டனர். 

சில பள்ளிகள் வாக்களிப்பு நிலையங்களாகச் செயல்படுகின்றன.

அங்கு கார்களை நிறுத்த அனுமதியில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

வாக்களிப்பு நிலையங்களில் மூத்தோரையும், உடற்குறை உள்ளவர்களையும் இறக்கிவிட, குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்படும்.

அது குறித்துத் தகவல் அறிய, ஓட்டுநர்கள் தேர்தல் அதிகாரிகளை நாடலாம். வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் பொதுமக்கள் சுற்றித் திரிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தபின் வாக்களிப்பு நிலையத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்று போலீசார் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்