Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"ஆக்கபூர்வமான முறையில் விவாதிக்கக்கூடிய உறுப்பினர் அவசியம்"

புக்கிட் பாத்தோக்கில் மக்கள் செயல் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் திரு. சான் சுன் சிங், ஆக்கபூர்வமான முறையில் விவாதிக்கக்கூடிய உறுப்பினர் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

வாசிப்புநேரம் -

புக்கிட் பாத்தோக்கில் மக்கள் செயல் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் திரு. சான் சுன் சிங், ஆக்கபூர்வமான முறையில் விவாதிக்கக்கூடிய உறுப்பினர் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அந்த வகையில் திரு. முரளி, புக்கிட் பாத்தோக்கில் தொடர்ந்து குடியிருப்பாளர்களின் தேவைகளை நன்கு புரிந்துகொண்டு வந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒருவரின் கருத்தில் உடன்பாடில்லை என்றால் அவரின் முகத்துக்கு நேராகத் தமது அதிருப்தியை வெளிப்படுத்தக்கூடிய தைரியம் கொண்டவர் திரு. முரளி என்று திரு. சான் கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர் காப்பிக்கடைகளிலும் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் திரு. முரளியைக் காணமுடியவில்லையே என்று செய்தியாளர்கள் கூறியதற்கும் திரு. சான் பதிலளித்தார்.

திரு. முரளி பொது இடங்களுக்கு மட்டும் செல்லவில்லை. அனைத்து புளோக்குகளிலும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தொகுதிவாசிகளின் தேவைகளைக் கேட்டறிந்ததாகச் சொன்னார் திரு. சான்.

Facebookகில் அதைப் பற்றிப் பெருமை பேசாத பெருந்தன்மை மிக்கவர் திரு. முரளி என்றார் அவர். 

சென்ற ஆண்டு பொதுத் தேர்தலில் அல்ஜூனிட் குழுத்தொகுதியில் திரு. முருளி தோல்வியுற்றார்.

அதைப் பொருட்படுத்தாது அவர் தொடர்ந்து குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றினார்;

அதுவே அவரது மனவுறுதிக்குச் சான்று; திரு. முரளி சொல்வதைச் செய்பவர் என்றார் திரு. சான்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்