Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அனைவரையும் உள்ளடக்கிய மருத்துவக் காப்புறுதித் திட்டங்களுக்கு அழைப்பு விடுத்த பால் தம்பையா

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் டாக்டர் பால் தம்பையா, அனைவரையும் உள்ளடக்கிய மருத்துவக் காப்புறுதித் திட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் டாக்டர் பால் தம்பையா, அனைவரையும் உள்ளடக்கிய மருத்துவக் காப்புறுதித் திட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தற்போதைய திட்டங்களில் குறைபாடுகள் இருப்பதாக அவர் சொன்னார்.

மெடிஷீல்டு லைஃப் வாழ்நாள் காப்புறுதித் திட்டத்தை அவர் உதாரணமாகச் சுட்டினார். 

தமது கட்சி வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், அத்தகைய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தைரியமாக விவாதிக்கக்கூடியவர் என்றார் டாக்டர் தம்பையா.

புக்கிட் பாத்தோக் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டேவிட் ஓங் பற்றி முதல் பிரசாரக் கூட்டத்தில் ஒருசிலர் பேசியது குறித்தும் டாக்டர் தம்பையா கருத்துரைத்தார். 

கூட்டத்துக்குப் பிறகு, டாக்டர் சீ, அவ்வாறு பேசியவர்களிடம் தனிப்பட்ட முறையிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொண்டு அந்த விவகாரம் பற்றிப் பேசவேண்டாம் எனக் கூறியதை அவர் சுட்டினார்.

அடுத்தடுத்த பிரசாரக் கூட்டங்களில் இது குறித்து எவரும் பேசவில்லை. ஆனால் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அதனைத் திரித்துக்கூறியதாக டாக்டர் தம்பையா குறைபட்டுக்கொண்டார். 

இதுவே மாற்றத்துக்குச் சரியான நேரம்;
முழு நேர நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க இதுவே சரியான நேரம்; வாக்காளர்களின் எண்ணங்களையும் கனவுகளையும் ஆர்வங்களையும் நாடாளுமன்றத்தில் எடுத்துக்கூற ஒருவரைத் தேர்வுசெய்ய இதுவே சரியான நேரம் என்றார் டாக்டர் தம்பையா.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்