Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

2021 ஜூலை மாதம் வரை வீட்டிலிருந்து வேலை செய்யவுள்ள Facebook பணியாளர்கள்

COVID-19 நோய்ப்பரவல் காரணமாகத் தனது பணியாளர்கள், அடுத்த ஆண்டு ஜூலை மாதம்வரை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
2021 ஜூலை மாதம் வரை வீட்டிலிருந்து வேலை செய்யவுள்ள Facebook பணியாளர்கள்

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

COVID-19 நோய்ப்பரவல் காரணமாகத் தனது பணியாளர்கள், அடுத்த ஆண்டு ஜூலை மாதம்வரை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்து மேற்கொள்ளத் தேவையான வசதிகளை அமைத்துக்கொள்ள, பணியாளர்களுக்கு சுமார் 1,300 வெள்ளி (1,000 டாலர்) வழங்கப்படும்.

இருப்பினும், அரசாங்க அறிவிப்பைப் பொறுத்து, சுமார் 2 மாதங்களாகக் கிருமிப்பரவல் கட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று Facebook கூறியது.

ஆனால், அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள பல அலுவலகங்கள் இந்த ஆண்டு இறுதி வரை திறக்கப்பட மாட்டா என்று அது குறிப்பிட்டது.

அங்கு அதிக அளவிலான COVID-19 சம்பவங்கள் பதிவாகி வருவதை அது சுட்டியது.

ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை ஏற்கெனவே Google, Twitter உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நீட்டித்துள்ளன.

அந்த நிறுவனங்களின் வரிசையில், Facebookஉம் இப்போது சேர்ந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்