பொதுத்தேர்தல் 2020

Images
  • dennis tan
    (படம்: Jeremy Long)

சுவரொட்டியை அகற்றியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் தேவை: அமைச்சர் சான்

வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing), வெளிப்படையாகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்போர் அவற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது ஆதாரங்கள் கட்டாயம் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான் (Dennis Tan) முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குத் திரு சான் பதிலளித்தார்.

பொதுத்தேர்தலின்போது எதிர்க்கட்சியின் சுவரொட்டிகளை மக்கள் செயல் கட்சி அகற்றியதைப் பார்த்ததாக குடியிருப்பாளர் ஒருவர் சொன்னதாகத் திரு டான் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அந்தச் சுவரொட்டிகளின் நீளம் குறிப்பிட்ட அளவை எட்டவில்லை என்பதற்காக அவை அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

அது குறித்துப் புகாரளிக்கும்படி திரு டானிடம் தேர்தல் துறை சொல்லியிருந்தது.

ஆனால் பொதுத் தேர்தலின்போது பிரசாரங்களில் கவனம் செலுத்தி வந்ததால் புகார் அளிக்கவில்லை என்றும், இனிமேலும் புகார் செய்ய எந்தத் திட்டமும் இல்லை என்றும் நேற்று திரு டான் கூறினார். 

Top