Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களுக்குக் கூடுதலானோர் வேலைகளை இழக்கலாம்: சான் சுன் சிங்

சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களுக்குக் கூடுதலானோர் தங்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடலாம் என்று மக்கள் செயல் கட்சியின் இரண்டாம் துணைத் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களுக்குக் கூடுதலானோர் வேலைகளை இழக்கலாம்: சான் சுன் சிங்

கோப்புப் படம்: Gaya Chandramohan

சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களுக்குக் கூடுதலானோர் தங்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடலாம் என்று மக்கள் செயல் கட்சியின் இரண்டாம் துணைத் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

பொருளியல், சுகாதாரத் துறை, முதலீடு ஆகியவற்றிலும் சவால்களை நாம் எதிர்கொள்ளக்கூடும் என்ற அவர், அவற்றால் பாதிக்கப்படுவோருக்குக் கைகொடுக்க அரசாங்கம் உறுதியான திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறினார்.

அதற்கான தீர்வுகளையும் குறிப்பிட்ட திரு. சான், வாக்காளர்கள் அத்தகைய விவகாரங்கள் குறித்த தங்கள் அக்கறையைப் பிரசாரக் காலத்தின்போது முன்வைத்ததாக சொன்னார்.

உலகளவில் முதலீட்டாளர்கள், பயனீட்டாளர்களின் நம்பிக்கை சரிந்துள்ளதைத் திரு. சான் சுட்டினார்.

எனவே, நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்க நிறுவனங்கள் அவற்றின் முதலீடுகளைச் சிங்கப்பூரில் செய்ய ஊக்குவிப்பது முக்கியம் என்றார் அவர்.

மேலும், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், ஊழியர்களுக்கு ஆதரவளிக்கக் கடும் முயற்சி செய்துவருவதாய்த் திரு. சான் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்