பொதுத்தேர்தல் 2020

Images
  • shanmugam
    படம்:  Zhaki Abdullah

பொதுத்தேர்தல் 2020: வாக்காளர்கள் தெரிவித்துள்ள தெளிவான கருத்துகள் நன்கு ஆராயப்படவேண்டும் - அமைச்சர் சண்முகம்

பொதுத்தேர்தல் 2020-இல் வாக்காளர்கள் தெரிவித்துள்ள தெளிவான கருத்துகளை மக்கள் செயல் கட்சி ஆராய்வது அவசியம் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார். எதிர்த்தரப்பினர் இம்முறை பெற்றுள்ள கூடுதல் வாக்குகளை அவர் சுட்டினார்.

5 உறுப்பினர் குழுத்தொகுதியான நீ சூனில் திரு. சண்முகம் தலைமையில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி அணி வென்றது.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தமது குழுவினரோடு தொகுதி உலா செல்வதற்கு முன் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முதலில் தகவல்களைத் திரட்டவேண்டும். காரணங்களைப் புரிந்துகொள்ளவேண்டும். வாக்காளர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் புரிந்துகொள்ளாமல் இருந்தால் அது தவறாக அமைந்துவிடும்

என்றார் திரு. சண்முகம்.

ஆழமாகச் சிந்தித்து முடிவுகளை நன்கு ஆராயவேண்டும் என்றும் அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 69.9 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது. இம்முறை அக்கட்சி பெற்ற வாக்கு விகிதம் 61.24 விழுக்காட்டுக்குக் குறைந்தது. 

Top