Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாக்களிப்பு தின செயல்முறைகள் முழுமையாக மறுஆய்வு செய்யப்படும்: தேர்தல்துறை

வாக்களிப்பு தினத்தன்று ஏற்பட்ட சிக்கல்களை அடுத்து, தேர்தல்துறை அதன் தொடர்பில் செயல்முறைகளை மறுஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
வாக்களிப்பு தின செயல்முறைகள் முழுமையாக மறுஆய்வு செய்யப்படும்: தேர்தல்துறை

(படம்: Ili Nadhirah Mansor/TODAY)

வாக்களிப்பு தினத்தன்று ஏற்பட்ட சிக்கல்களை அடுத்து, தேர்தல்துறை அதன் தொடர்பில் செயல்முறைகளை மறுஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம், பல இடங்களில் நீண்ட வரிசை இருந்ததாகக் கூறப்பட்டது. அதனால் வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்பட்டது.

வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்பட்டது இதற்கு முன் நடந்திராத ஒன்று.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 10) சிங்கப்பூரின் 13ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது. அன்று செயல்முறைகள் சரிவர இல்லை என்று அறிவதாக தேர்தல்துறை TODAY இணையப்பக்கத்திடம் தெரிவித்தது.

வாக்காளர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அறிமுகப்படுத்தப்பட்ட செயல்முறைகள், வாக்களிப்பை மெதுவடையச் செய்தது என்பதைத் தேர்தல்துறை ஒப்புக்கொண்டது.

வாக்களிப்பு நிலையங்களில் என்னென்ன தவறாக நடந்தது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிய, முழுமையான மறுஆய்வை மேற்கொள்ளவிருப்பதாகத் தேர்தல்துறை தெரிவித்தது.

வாக்களிப்பு தினத்தன்று ஏற்பட்ட சிரமங்களுக்கு, குறிப்பாக மூத்தோரிடம், அது மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

குறிப்பிட்ட வாக்களிப்பு நேரத்தை விடுத்துப் பலர் காலையில் வந்ததுடன், புதிய பாதுகாப்பு நடைமுறைகளின் காரணமாக நீண்ட வரிசைகள் ஏற்பட்டதாக, வெள்ளிக்கிழமை பிற்பகல் தேர்தல்துறை முதன்முறை மன்னிப்புக் கேட்டது.

மூன்று மணிநேரத்திற்குப் பிறகு மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட தேர்தல்துறை, வரிசைகளில் கூட்டம் குறைந்ததாகத் தெரிவித்தது.

தேர்தல் முடிவடைந்த பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் லீ சியென் லூங், தேர்தல் செயல்முறைகள் மறுஆய்வு செய்யப்படும் என்று சுட்டினார். 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிக வாக்காளர்கள் திரண்டதாகக் கூறினார் அவர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்