Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாக்களிப்பு நிலைய அனுபவங்கள் குறித்து வாக்காளர்களிடம் கருத்துகளைத் திரட்ட தேர்தல் துறை திட்டம்

வாக்களிப்பு நிலைய அனுபவங்கள் குறித்து வாக்காளர்களிடம் கருத்துகளைத் திரட்ட தேர்தல் துறை திட்டம்

வாசிப்புநேரம் -
வாக்களிப்பு நிலைய அனுபவங்கள் குறித்து வாக்காளர்களிடம் கருத்துகளைத் திரட்ட தேர்தல் துறை திட்டம்

படம்: Xabryna Kek

வாக்களிப்பு நிலைய அனுபவங்கள் குறித்து, வாக்காளர்களின் கருத்துகளைத் திரட்ட, தேர்தல் துறை கருத்தாய்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

வாக்குப்பதிவுச் செயல்முறைகள் மறுஆய்வு செய்யப்பட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கருத்தாய்வு அமையும்.

கருத்தாய்வு முடிவுகள், எதிர்காலப் பொதுத் தேர்தல் செயல்முறைகளை மேம்படுத்த உதவும் என்று தேர்தல் துறை சுட்டியது.

தேர்தல் அதிகாரி செய்த தவற்றின் காரணமாக வாக்காளர் ஒருவர், இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அதனையடுத்துத், தேர்தல் செயல்முறைகள் குறித்து, சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் பால் தம்பையா கோரியிருந்தார்.

அதன் தொடர்பில் தேர்தல் துறை பதிலளித்தது.

ஒரு சில வாக்களிப்பு நிலையங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தத் தேர்தலில், சுமார் 96 விழுக்காட்டு வாக்காளர்கள், வாக்குகளைப் பதிவு செய்தனர் என்று தேர்தல் துறை குறிப்பிட்டது.

வாக்களிப்பு தினத்தன்று, நோய்ப்பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்களுக்கு முழு நம்பிக்கை இருந்ததை அது காட்டியதாகத் தேர்தல் துறை கூறியது.

இந்தகைய சூழலிலும், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை ரகசியமான முறையில் பதிவு செய்ய முடிந்ததாகத் தேர்தல் துறை குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்