Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பொதுத்தேர்தல் 2020

வாக்குச் சீட்டுகளில் பயன்படுத்தப்படும் புதுவகைப் பேனாக்களின் மை மறைந்துவிடும் என்ற தகவல் உண்மையில்லை: தேர்தல்துறை

வாக்குச் சீட்டுகளில் பயன்படுத்தப்படும் புதுவகைப் பேனாக்களின் மை, பயன்படுத்திய சில நிமிடங்களில் உலர்ந்துவிடும் என்ற தகவல் உண்மையில்லை என்று தேர்தல்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
வாக்குச் சீட்டுகளில் பயன்படுத்தப்படும் புதுவகைப் பேனாக்களின் மை மறைந்துவிடும் என்ற தகவல் உண்மையில்லை: தேர்தல்துறை

(படம்: Zhaki Abdullah)

வாக்குச் சீட்டுகளில் பயன்படுத்தப்படும் புதுவகைப் பேனாக்களின் மை, பயன்படுத்திய சில நிமிடங்களில் உலர்ந்துவிடும் என்ற தகவல் உண்மையில்லை என்று தேர்தல்துறை தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பேனாக்கள் மூலம் இடப்படும் குறிகள் எளிதில் அழியக்கூடியவை அல்ல. அவை நிரந்தரமாகவே இருக்கும் என்று தேர்தல் துறை கூறியது.

தென் கொரியா உள்ளிட்ட பிற நாடுகளில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற பேனாக்களே, இங்கும் பயன்படுத்தப்படும் என்று அது சொன்னது.

இவ்வாண்டுப் பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள், பழைய வாக்குச்சீட்டுகளில் இருந்து மாறுபட்டவை அல்ல.

அவை, சென்ற ஆண்டுகளைப் போலவே கடுமையான பாதுகாப்புச் சூழலில் அச்சிடப்பட்டதாகத் தேர்தல் துறை கூறியது.

வாக்காளர்கள் தங்கள் சொந்தப் பேனாக்களைக் கொண்டும் வாக்களிக்கலாம் என்பதைத் தேர்தல்துறை நினைவூட்டியது.

வாக்குகளின் பாதுகாப்பையும் ரகசியத்தன்மையையும் உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகத் தேர்தல்துறை குறிப்பிட்டது.

வாக்களிப்பு நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும், கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதாக அது சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்