Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020:வேட்பாளர்களின் செலவு விவர அறிக்கையை நாளையிலிருந்து பார்வையிடலாம்

பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் செய்த செலவு பற்றிய விவரங்களைக் கொண்ட அறிக்கை நாளை பார்வைக்கு வைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி வரை அந் அறிக்கையைப் பார்வையிடலாம் என்று தேர்தல்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் கீழ், பொதுத் தேர்தல் முடிவுகள் அரசிதழில் வெளியான 31 நாள்களுக்குள் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு விவரத்தைத் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

வேட்பாளர் பிரசார நிதியின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்ய அது அவசியம் என்று தேர்தல் துறை குறிப்பிட்டது.

தொகுதியில் உள்ள வாக்காளர் எண்ணிக்கையைப் பொருத்து அவர் செலவிடும் தொகையின் உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.

வேட்பாளர் செலவின அறிக்கையைப் பார்வையிட 2 வெள்ளி கட்டணம் செலுத்தவேண்டும்.

அறிக்கைகளைப் பார்வையிட விரும்புவோர், அதற்குத் தேர்தல் துறையிடம் முன்பதிவு செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் joyce_kow [at] eld.gov.sg, ng_hui_peng [at] eld.gov.sg ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்