Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் 4 விழுக்காடு குறைவு: அமைச்சர் லாரன்ஸ் வோங்

பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் 4 விழுக்காடு குறைவு: அமைச்சர் லாரன்ஸ் வோங்

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் 4 விழுக்காடு குறைவு: அமைச்சர் லாரன்ஸ் வோங்

(கோப்புப் படம்: Gaya Chandramohan/ CNA)

பொதுத்தேர்தலில், மக்கள் செயல் கட்சிக்குத் கிடைத்த 61.2 விழுக்காட்டு வாக்குகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும், 4 விழுக்காடு குறைவு என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

அந்த 4 விழுக்காட்டு வாக்கு விகிதம் சுமார் 100 ஆயிரம் வாக்குகளைப் பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.

அதே நேரம் ஆளுங்கட்சிக்குத் தேர்தலில் தெளிவான அதிகாரம் கிடைத்திருப்பதையும் திரு. வோங் சுட்டினார்.

மக்கள் செயல் கட்சியின் தலைமையகத்தில், கட்சி ஆர்வலர்களுடன் காணொளி வாயிலாகத் தேர்தல் முடிவுகள் குறித்து அமைச்சர் வோங் பல விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கடந்த 9 பொதுத்தேர்தல்களில், மக்கள் செயல் கட்சி 2 முறை மட்டுமே சுமார் 70 விழுக்காடு அல்லது அதற்கும் மேற்பட்ட வாக்கு விகிதத்தைப் பெற்றதாக அமைச்சர் சொன்னார்.

தேர்தல் முடிவுகள், எதிர்பார்க்கப்பட்ட 60க்கும் 65 விழுக்காட்டிற்கும் இடையே அமைந்ததாக அவர் கூறினார்.

வருங்காலத்திலும், 65 விழுக்காட்டு வாக்கு விகிதத்திற்கும் மேல் மக்கள் செயல் கட்சி பெறுவது கடினமே என்று தோன்றுவதாகத் திரு. வோங் குறிப்பிட்டார்.

கட்சி, இவ்வாண்டுப் பொதுத்தேர்தலை முழுமையாக ஆராயும் என்றார் அவர்.

மின்னிலக்கப் பிரசாரத்தில் மக்கள் செயல் கட்சி நன்றாகச் செய்யவில்லை என்றும் அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்